டாக்டர் திரைப்படம் 63 கோடி வசூலித்ததா?

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (14:03 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்துள்ளதை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 7.45 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் 2வது நாளில் முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூல் செய்தது. 
 
இதனிடையே சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் இதுவரை 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் தியேட்டர்களில் வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த 5 படங்களில் டாக்டர் படமும் ஒன்று என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்