பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் விருந்து!

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (11:39 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதனால் காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் ஷூட்டிங் அதிக நாட்கள் நடந்ததால் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அயலான் ரிலீஸ் ஆகும் நிலையில் எஸ் கே 21 பட டைட்டில் அறிவிப்பு வருவதால் அவர் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமையவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்