சிவகார்த்திகேயன் படத்துக்காக தயாராகும் 100 மன்மதன் சிலைகள்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (14:16 IST)
பாடல் காட்சியில் இரண்டு ஏக்கர் நிலத்தை வளைத்து அறுபதடி உயரத்துக்கு செட் போடுவதெல்லாம் டி.ஆர். காலத்தோடு போயே போச்சு. ஷங்கர் மட்டும் இன்னும் பாடல் காட்சியில் பிரமாண்டத்தை காட்ட போராடுகிறார். பிரமாண்ட இயக்குனர் பெயரை தக்க வைக்க வேண்டுமே.

 
சினிமாவே இப்படி சீரியசாக மாறினாலும் சிலர் மட்டும் மாறுவதாக இல்லை. ரெமோ படத்துக்காக மன்மதனின் 100 சிலைகளை - ஒவ்வொன்றும் எட்டு அடி உயரம் - தயார் செய்கிறார்கள்.
 
எதற்கு இந்த சிலைகள்.. பாடல் காட்சிக்காகவா என்றால் இல்லை. ரெமோ வெளியாகும் திரையரங்குகளில் வைக்கவாம்.
 
கபாலி படத்தின் போது ரஜினியின் சிலைகளை தியேட்டரில் வைக்க முடிவெடுத்து சைனாவில் ஆர்டரும் கொடுத்தார் தாணு. சௌந்தர்யா அதனை விரும்பாமல் நோ சொல்ல அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது ரெமோவுக்காக தயாராகிறது 100 மன்தமன் சிலைகள்.
 
பணத்தை எப்படி பறக்கவிடுறதுன்னு சினிமாக்காரங்ககிட்டதான் கத்துக்கணும்.
அடுத்த கட்டுரையில்