‘விஜய்யை சந்தித்துக் கதை சொன்னேன்… ஆனால்?..’ – இயக்குனர் சிவா பதில்!

vinoth
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (12:54 IST)
ஒளிப்பதிவாளரான சிவா கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் அஜித் நடிப்பில் நான்கு படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். அதன் பின்னர் அவர் ரஜினியை வைத்து இயக்கிய அண்ணாத்த திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

தற்போது அவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இதையடுத்து ப்ரமோஷன் பணிகளில் கலந்துகொண்டு வரும் சிவா விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவதற்கான பேச்சுவார்த்தைக் குறித்து பேசியுள்ளார். அதில் “நான் பலமுறை விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளேன். சிலமுறைக் கதைகளும் சொல்லியுள்ளேன். சமீபத்தில் கூட சந்தித்தேன். ஆனால் சரியான நேரம் அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும்” எனக் கூறியுள்ளார். விஜய், தன்னுடைய கடைசிப் படமான “விஜய் 69” படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்