பாடகர் எஸ்.பி.பியின் கடைசி ஆல்பம் ....

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (18:14 IST)
இந்திய சினிமாவில் முன்ன்ணி பாடகராகவும், நடிகராவும், தயாரிப்பாளராகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் வலம் வந்தவர் பாலசுப்பிரமணியம்.

இவர், இந்தி, தமிழ், கன்னடம்,மலையாளம், உருது, தெலுங்கு ஆகிய மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடும் பாடல்களில் இவரது குரலில் தனித்தன்மைக்கு ஏற்ப பாவம்தான் ரசிகர்களை இவர் பக்கம் சுண்டி இழுத்ததுடன், இவர் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்து, அவரைப்போலவே அவரது பாடல்களும் அமரத்துவம் பெறக் காரணமானது. பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறது.

சமீபத்தில்,  அவரது 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சினிமாத்துறையினரும், இசைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய கடைசி ஆல்பம் விஸ்வரூப தரிசனம். இது கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. மாகாபாரதப் போரில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணன் விஸ்வரூப தரிசனம் காட்டியதை அடிப்படையாகக் கொண்டு, இப்பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்திற்கு கே.எஸ்.ரகு  நாதன் இசை அமைத்துள்ளார். மேலும், முதலில் எஸ்பிபி இப்பாடல்களை பாடிய பின் அதற்கு இசையமைத்துள்ளதாக இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்