சிங்கம்புலி படத்துக்கு பின் நடிப்பதையே நிறுத்திவிட்டேன் – புலம்பும் நடிகை!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (18:16 IST)
சிங்கம்புலி படத்தில் கிளாமரான கதாபாத்திரம் ஒன்றில் நடித்த நடிகை நீலு அதற்குப் பிறகு படங்களில் நடிப்பதையே நிறுத்தி விட்டதாக சொல்லியுள்ளார்.

நடிகை நீலு சிங்கம்புலி படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதைப்படி பிளே பாயான ஜீவா நீலுவின் மகள் மற்றும் நீலு இருவரோடு சரசம் செய்வார். இதனால் அந்த கதாபாத்திரம் சமூகவலைதளங்களில் பிரபலமாகி மீம்ஸ் எல்லாம் டரண்ட் ஆனது. இந்நிலையில் அந்த நீலு இப்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா?

சினிமாவை விட்டே ஒதுங்கி விட்டாராம். காரணம் சிங்கம் புலி படத்தில் அவரின் கதாபாத்திரம்தானாம். தன்னிடம் உங்களையும் உங்கள் பெண்ணையும் ஜீவா சைட் அடிப்பார் என சொல்லிதான் எடுத்தனராம். ஆனால் கதையில் அது வேறு மாதிரி காண்பிக்கப்பட்டு இருந்தது எனக் கூறி புலம்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்