சிம்பு கெட்டப் போட்டாலே இப்படி தான் ஆகிடுவாங்களா? சாண்டியின் அலப்பறையை பாருங்க

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (12:49 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி 6 வது வாரத்தில் அடியெடுத்து வைத்து சென்றுகொண்டிருக்கும் வேளையில் இந்த வாரத்திற்கான லக்ஜரி பட்ஜெட் டாஸ்க் புது விதமாக இருக்கிறது. சினிமா பரபலங்ககளின் கதாபாத்திரத்தில் அவரவருக்கான கேரக்டர் கொடுக்கப்பட்டு டாஸ்க் செய்து வருகின்றனர். 


 
எந்த பரபலத்தின் பாடல் ஒளிபரப்படுகிறதோ அப்போது அந்த கெட்டப்பில் இருப்பவர்கள் வந்து டான்ஸ் ஆடவேண்டும். இதில் சிம்புவின் கதாபாத்திரம் சாண்டிக்கு கொடுக்கப்பட்டிள்ளது. அவருக்கு சொல்லவா வேண்டும் நடனத்தில் சிம்புவையே தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல, அந்த அளவிற்கு செம்ம மாஸாக நடனமாடுகிறார். 
 
அவருடன் சேர்ந்து சாக்ஷி, லொஸ்லியா ஷெரின் உள்ளிட்டோர் டான்ஸ் ஆடுகின்றனர். இந்த ப்ரோமோ வீடியோவின் இறுதியில் சாண்டி பெண்களுடன் வம்பிழுக்கிறார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் சரவணன் மற்றும் சாண்டிக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் பொருத்தமாக உள்ளது என்று கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்