விஜய்யை அடுத்து மீண்டும் ஒரு 'புலி' கதையில் சிபிராஜ்

Webdunia
ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (19:45 IST)
விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்று சுமாரான வசூலைப் பெற்றது. இந்த நிலையில் விஜய்யின் ரசிகர்கள் ஒருவரான சிபிராஜ் உண்மையிலேயே புலியின் கதை ஒன்றில் நடிக்கவுள்ளார். அழிந்து வரும் புலி இனத்தை காப்பதற்காக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
சிபிராஜ் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கும் இந்த படத்தை தரணிதரன் இயக்கவுள்ளார் இந்த படத்தை ஆரோ சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே அதர்வா நடித்த '100' உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் அதனோடு இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் குறித்த அறிவிப்பும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே சிபி சத்யராஜ் தற்போது 'ரங்கா', 'வால்டர்' மற்றும் 'மாயோன்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் 'வால்டர்' திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்