''தளபதி 64' படத்தில் கமல்ஹாசன் ஸ்டைலில் விஜய்!

ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (13:16 IST)
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்தபடமான 'தளபதி 64' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 
 
இந்த நிலையில் 'தளபதி 64' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு இயக்குனர் ரத்னகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேயாத மான்', மற்றும் 'ஆடை' படங்களை இயக்கிய ரத்னகுமார் தனது  வாழ்த்து செய்தியில் 'வாழ்த்துக்கள் மச்சி. இது ஒரு ஆரம்பம் தான். நீங்கள் ஒரு கமல் தீவிர ரசிகர் என்பது எனக்கு தெரியும். எனவே கமல் ஸ்டைலில் விஜய்யின் கேரக்டர் 'தளபதி 64' படத்தில் இருக்கும் என நம்புகிறோம். ஒரு கமல் ரசிகராக நீங்கள் தளபதி விஜய்யை எப்படி பயன்படுத்த போகிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கின்றோம்' என்று கூறியுள்ளார்.
 
ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ், 'பேட்ட' படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் இயக்கும்போது ஒரு ரசிகரின் மனநிலையில் இருந்து இயக்கியது போல் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ், விஜய்யை வைத்து இயக்கும் ஒவ்வொரு காட்சியையும் கமலை மனதில் வைத்து இயக்குவார் என்று நம்புவோம்
 
'தளபதி 64' திரைப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதியும் நாயகியாக கைரா அத்வானியும் நடிப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்