ஸ்ருதி ஹாசன் பாலிவுட்டின் ஹாட் நடிகை: இதை சொன்னது யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (14:10 IST)
ஸ்ருதி ஹாசன் பாலிவுட்டில் கவர்ச்சியான பெண். ஆனால் துரதிருஷ்டவசமாக அவருக்கு நல்ல படங்களை எப்படி தேர்வு செய்வது என்று தெரியவில்லை என கமால் ஆர் கான் தெரிவித்துள்ளார்.


 

 
பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான கமால் ஆர் கான் எப்போதும் யாரையாவது விமர்சித்து கொண்டே இருப்பார். அவரது விமர்சனம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தும். இந்நிலையில் இவர் தற்போது ஸ்ருதி ஹாசனை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-
 
எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஸ்ருதி ஹாசன். ஏனென்றால் பாலிவுட்டில் கவர்ச்சியான நடிகை அவர்தான். ஆனால் துரதிருஷ்டவசமாக அவருக்கு நல்ல படங்களை எப்படி தேர்வு செய்வது என்று தெரியவில்லை என ட்வீட் செய்துள்ளார்.
 
இவரின் இந்த பதிவுக்கு ஒருவர் பதில் பதிவு செய்துள்ளார். அதில், ஸ்ருதி ஹாசன் அழகாக உள்ளார். ஆனால் அவர் குரல் தான் இனிமையாக இல்லை என பதிவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்