உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார். பின்னர் மீண்டும் புது காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளியை காதலனுடன் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட அது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அவரை பார்த்தால் ஸ்ருதி ஹாசனுக்கு தாத்தா போல் இருக்கிறார். இப்படி கட்டியணைத்து போஸ் கொடுத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.