ஷாரூக்கான் வீட்டில் போதைப்பொருள் சோதனை! – பாலிவுட்டில் அடுத்தடுத்து அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (13:33 IST)
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஷாரூக்கான் வீட்டில் ரெய்டு நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் போதைபொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல இந்தி நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆர்யன் கான் மீதான வழக்கில் ஜாமீன் வழங்கவும் மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கின் தொடர்ச்சியாக நடிகர் ஷாரூக்கானின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து போதைப்பொருள் வழக்கில் ஷாரூக்கான் பெயர் அடிபட்டு வருவது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்