டிராபிக் ராமசாமி கதையை ரஜினியை வைத்துப் படமாக்க நினைத்தேன் - ஷாக் கொடுத்த ஷங்கர்

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (17:13 IST)
‘டிராபிக் ராமசாமி கதையை ரஜினியை வைத்துப் படமாக்க நினைத்தேன்’ என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

 
சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘டிராபிக் ராமசாமி’ என்ற படம் உருவாகியுள்ளது. டிராபிக் ராமசாமி வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவர் மனைவியாக ரோகிணி நடித்துள்ள இந்தப் படத்தை, விக்கி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஷங்கர், “டிராபிக் ராமசாமி, என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. அவருடைய கதையைப் படமாக்க நானும் நினைத்திருக்கிறேன்.
 
எனக்கும் அப்படி ஒரு ஆசை இருந்தது. அவர் ஒரு கத்தி எடுக்காத ‘இந்தியன்’, வயசான ‘அந்நியன்’ அம்பி. ரஜினி சாரை வைத்து இவர் கதையை எடுக்க நினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும், ‘வட போச்சே...’ என்று ஏமாற்றம். இருந்தாலும் மகிழ்ச்சி தான். இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்” என்று ஷாக் கொடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்