ஷங்கர், கமல் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாததால் தயாரிப்பாளர்கள் கலக்கம்

Webdunia
சனி, 18 அக்டோபர் 2014 (14:46 IST)
தீபாவளிக்கு கத்தி, பூஜை படங்கள் வெளியாகின்றன. டிசம்பர் 12 லிங்கா வெளியாகிறது. ஷங்கரின் ஐ நவம்பரில் திரைக்கு வருகிறது என்கிறார்கள்.
 
இதில் கத்தி, பூஜை, லிங்கா படங்களின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது. ஆனால் ஐ மற்றும் கமலின் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்களின் ரிலீஸ் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாமலே உள்ளது. இந்தப் படங்கள் வெளியாகும் நாள் சின்ன பட்ஜெட் படங்களை வெளியிடுவது தற்கொலைக்கு சமானம். இவை வெளியான ஒருவாரம் கழித்தோ இரு வாரங்கள் கழித்தோ படத்தை வெளியிடுவதுதான் பாதுகாப்பு.
ஐ மற்றும் கமல் படங்களின் ரிலீஸ் தேதிகள் உறுதி செய்யப்படாததால் சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். இவர்களின் படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. பெரிய படங்களின் ரிலீஸ் தேதிகள் தெரிந்தால்தான் அதற்கேற்ப தங்கள் படங்களை வெளியிட முடியும். 
பெரிய படங்களால் திரையரங்குகள் கிடைக்காதது ஒருபக்கம் என்றால் ரிலீஸ் தேதி தெரியாததால் ஏற்படும் அவஸ்தை இன்னொருபுறம். இந்தப் பிரச்சனைக்கு தயாரிப்பாளர்கள் சங்கம்தான் உதவ முன்வர வேண்டும்.