ஷங்கரின் கேம்சேஞ்சர் படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமம் இத்தனை கோடியா?

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (14:23 IST)
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை இந்த படத்தின் இன்று ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. படத்துக்கு ‘கேம் சேஞ்சர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாக உள்ளது.

இந்த படத்தின் மூலம் முதன் முதலாக தமன் ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார். இதுவரை ஷங்கர் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவர்தான் இசையமைத்துள்ளார்கள். இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமம் சுமார் 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்