நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிசலுகை கேட்டு அது சம்மந்தமாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவாதப் பொருளானது.
தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்திலிருந்து வாங்கினார். இந்த காருக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் வரியில் தளர்வு அளிக்க கோரி நடிகர் விஜய் அப்போது மனு அளித்திருந்தார். மனு அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மனு மீதான விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதித்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுபற்றிய மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ஷங்கரின் நண்பன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யும் ஷங்கரும் சேர்ந்துதான் ரோல்ஸ் ராய்ஸ் இறக்குமதி செய்தார்களாம். ஷங்கர் அப்போதே வரிகட்டி காரைப் பயன்படுத்தி வருகிறாராம். ஆனால் விஜய் 10 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளாராம்.