47 நாளில் ரீமேக் படத்தை முடித்த படக்குழு – தமிழில் அட்ரஸ்ஸே காணோம்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (17:04 IST)
நானி நடிப்பில் உருவான ஜெர்ஸி படத்தின் இந்தி ரீமேக் சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ஜெர்சி என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 36 வயது என்பது கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்கான வயது. அந்த வயதில் இந்திய அணியில் இடம்பிடிக்க போராடும் ஒரு கிரிக்கெட் வீரனின் கதையே ஜெர்ஸி. இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் ரீமேக் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க இருந்தார். இவரும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் இந்தப்படத்தில் நடிக்க இவரைத் தேர்வு செய்தனர்.

ஆனால் தமிழில் அதன் பிறகு அந்த படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் இந்தியிலோ கொரோனா லாக்டவுனிலும் 47 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி மொத்த படத்தையும் முடித்துள்ளனர். இது குறித்து டிவிட்டரில் அறிவித்த ஷாகித் கபூர் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் ஷாகித் கபூர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்