திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணையும் இயக்குனர் – எம் எல் ஏ சீட்டும் உண்டாம்!

வியாழன், 17 டிசம்பர் 2020 (16:02 IST)
திமுகவில் பிரபல இயக்குனரும் நடிகருமான கரு பழனியப்பன் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

திரைப்பட இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்பட்டவர் கரு பழனியப்பன். அதுமட்டுமில்லாமல் தன்னை எப்போதும் திராவிடக் கட்சிகளின் ஆதரவாளராகவும், பாஜகவுக்கு எதிரானவராகவும் காட்டிக் கொள்பவர். இப்போது திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவருக்கான அரசியல் பேச்சுகளை எழுதிக் கொடுப்ப்தும் இவர்தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் திமுகவுக்காக பிரச்சாரம் செய்திருந்தாலும், இந்த முறை கட்சியில் சேர்ந்து தேர்தல் வேலை செய்ய உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் அவருக்கு அவர் சொந்த ஊரான காரைக்குடி தொகுதியில் சீட் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்