இருக்குற மரியாதையை கெடுத்து கொள்ள வேண்டாம்: பாக்யராஜ்க்கு செல்வமணி வேண்டுகோள்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (16:34 IST)
ஏற்கனவே இருக்கும் நல்ல மரியாதையை கெடுத்து கொள்ள வேண்டாம் என இயக்குநர் கே பாக்யராஜ்க்கு இயக்குனர் செல்வமணி தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
 
பிப்ரவரி 27ஆம் தேதி இயக்குனர் சங்க தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து கே பாக்யராஜின் இமயம் அணிக்கும், ஆர்கே செல்வமணியின் புது வசந்தம் அணிக்கும் இடையே கடும் போட்டி உள்ளது 
 
இந்த நிலையில் சமீபத்தில் தனது அணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்தபோது ஆர்கே செல்வமணி குறித்து கடுமையாக பாக்யராஜ் விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக ஆர்கே செல்வமணி இயக்கிய படங்கள் எல்லாம் அவர் இயக்கிய தானா என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்
 
இந்த நிலையில் இதுகுறித்து பதிலடி கொடுத்துள்ள ஆர்கே செல்வமணி தரப்பினர் கே பாக்யராஜ்க்கு என ஒரு நல்ல மரியாதை இருக்கிறது. அந்த மரியாதையை பதவி ஆசைக்காக கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்