கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இன்று காலை முன்பதிவு தொடங்கிவிட்டபோதிலும், இன்னும் பல தியேட்டர்கள் நிரம்பாமல் இருப்பதாகவும், பல இடங்கள் காலியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் முக்கிய திரையரங்குகளான கமலா, தேவி, காசி உள்ளிட்ட தியேட்டர்கள் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளதாகவும், மற்ற தியேட்டர்களில் பல சீட்டுகள் காலியாக இருப்பதும் முன்பதிவு இணையதளங்களில் இருந்து தெரிய வருகிறது. காலை 9 மணி காட்சி, கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் தீர்ந்துவிட்டாலும், 12 மணி, 3 மணி, 7 மணி, 11 மணி காட்சிகள் இன்னும் அதிகமான டிக்கெட்டுகள் காலியாக இருப்பதை காட்டுகிறது.
கமல்ஹாசன், சிம்பு, மணிரத்னம், திரிஷா, ஏ.ஆர். ரஹ்மான் என ஒரே படத்தில் பல பிரபலங்கள் இருந்தும், முன்பதிவு மெதுவாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.