இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் இந்த படத்தை முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலக, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். படத்தில் ப்ரதீப்புக்கு சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்போது விறுவிறுப்பாக முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சீமான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் ப்ரதீப் மற்றும் நயன்தாரா ஆகியோருக்கு தந்தையாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனராகவும் நடிகராகவும் செயல்பட்டு வந்த சீமான் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.