மனைவி உடல்நிலையால் வாய்ப்புகளை தவிர்க்கும் சத்யராஜ்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (10:20 IST)
நடிகர் சத்யராஜ் இப்போது அதிகளவில் தென்னிந்திய படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.

கதாநாயகனாக நடித்தவரை தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்திய சத்யராஜ், அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் போது தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய படங்களில் அதிக அளவில் நடிக்க ஆரம்பித்தார். அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எந்த அளவுக்கு என்றால் சமீபத்தில் அவர் கோவிட் தொற்றால் பாதிகக்ப்பட்ட போது தெலுங்கு ஊடகம் ஒன்று அவரை தெலுங்கு நடிகர் சத்யராஜ் என்று குறிப்பிடும் அளவுக்கு.

ஆனால் கடந்த சில மாதங்களாக அவரின் மனைவியின் உடல்நிலை குன்றியதால் அவரை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் இருந்து வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தாராம். இந்நிலையில் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் தமிழ்  - தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்