லட்சுமி மேனன் நல்லா வந்திருக்கணும்.. மிஸ் பண்ணிட்டாங்க – சசிகுமார் வருத்தம்!

vinoth
செவ்வாய், 12 நவம்பர் 2024 (09:02 IST)
கும்கி படம் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன், அதன் பிறகு அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் ஆனதால், அவருக்கு ராசியான நடிகை என்று பெயர் கிடைத்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் அவர் லைவ்  உரையாடலில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் அவர் நடித்த சில படங்களும் வெற்றி பெறாததால் சில ஆண்டு இடைவெளியில் இப்போது மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.  கடைசியாக முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபுவோடு புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் லட்சுமி மேனனோடு குட்டிப்புலி மற்றும் சுந்தரபாண்டியன் ஆகிய இரு படங்களில் நடித்த சசிகுமார் “அவர் நல்லா வந்திருக்கணும். சுந்தர பாண்டியன் படத்தில் நடிக்கும்போது அவர் பன்னிரண்டாவதுதான் படித்துக் கொண்டிருந்தார். கும்கி நடிக்கும்போது பத்தாவதுதான் படித்தார். அவங்க நல்ல நடிகை. நல்லா வந்திருக்கணும். ஆனா காலேஜ் படிப்பு மற்றும்  பரதநாட்டியத்துல ஈடுபட ஆரம்பிச்சிட்டாங்க” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்