குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

vinoth
சனி, 28 செப்டம்பர் 2024 (13:21 IST)
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்தது. அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து நம்பிக்கைக்குரிய தயாரிப்பு நிறுவனமாக உருவாகி வருகிறது இந்த படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோ நிறுவனம். இப்போது அந்த நிறுவனம் ஐந்து படங்களை வரிசையாக தயாரிக்கிறது. சமீபத்தில் அவர்கள் தயாரிப்பில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது.

இதையடுத்து அந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த  ஒரு படத்தில் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார்.  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் இன்று பூஜையோடு தொடங்கியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MILLION DOLLAR STUDIOS (@millionoffl)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்