சர்கார் லீக்..! இணையத்தில் வெளிட்ட தமிழ் ராக்கர்ஸ்

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2018 (13:29 IST)
சர்கார் திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையத்தளத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ் 
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் காலை முதல்காட்சியில் இருந்து படத்தை பார்த்துவிட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் சர்கார் படத்தின் எச் டி பிரிண்ட் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் எச்சரித்ததை அடுத்து தற்போது படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். 
 
சர்கார் படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மீண்டுவந்து இன்று வெளியாகியது. திரையங்குகளில்  3 காட்சிகள் கூட முடிவடையாத நிலையில் திருட்டு தனமாக படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சி அடையவைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். 
 
இணையத்தளத்தில் சர்க்கார் படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்த இந்த செயலில் ஈடுப்பட தமிழ் ராக்கர்சால் பல கோடிகளை கொட்டி படமெடுத்த சர்கார் பட குழுவினர் தலையில் இடி விழுந்ததுபோல் உடைந்துவிட்டனர் .  விஜய் ரசிகர்களும் படம் வெளியானதை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்