அறிவு என்னை பிளாக் செய்துவிட்டார்… இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தகவல்!

vinoth
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (14:50 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். குறும்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் பிரவேசித்த பல இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து பின்னர் ரஜினியின் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார்.

தற்போது தமிழைத் தாண்டியும் பிற மொழி படங்களுக்கு இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன் முதல் முதலாக சென்னையில் இசை கச்சேரி நடத்த உள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி(நாளை) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘நீயே ஒளி’ என்ற இசை கச்சேரி நடக்க உள்ளது.

இது சம்மந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சந்தோஷ் நாராயணன் “நீயே ஒளி என்பது புத்தரின் வாசகம். சார்பட்டா பரம்பரை படத்தில் இடம்பெற்ற அந்த பாடலை அறிவு எழுதியிருந்தார். அதையே கான்செர்ட்டுக்கு பெயராக வைக்க வேண்டும் என விரும்பினோம். கான்செர்ட் அழைப்பிதழை அறிவுக்கு அனுப்பினேன். அவர் என்னை ப்ளாக் செய்துவிட்டார் போலிருக்கிறது. அவர் வந்தால் சந்தோஷப்படுவேன். எஞ்சாயி எஞ்சாமி பிரச்சனையால் அவர் கோபமாக இருக்கலாம். கொஞ்ச காலத்தில் அனைவரும் சமாதானம் ஆகிவிடுவோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்