சந்தானத்தின் அடுத்த படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பு நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (15:04 IST)
சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படத்திற்கு ’வடக்குப்பட்டி ராமசாமி’என்ற கவுண்டமணியின் பிரபலமான ஜோக் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  படத்துக்கு ஒளிப்பதிவாளராக விட்னஸ் படத்தின் இயக்குனர் தீபக் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் விரைவில் ரிலீஸ் பற்றிய தகவல்கள் அறிவிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்