மருதநாயகம் படத்தில் கமலுக்கு பதில் இவரா?.. நெருங்கிய நண்பர் சந்தானபாரதி சொன்ன சீக்ரெட்!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (15:15 IST)
மருதநாயகம் கமலின் கனவுப் படங்களில் ஒன்று. இந்த படத்துக்காக இங்கிலாந்து மகாராணியை எல்லாம் வரவைத்து படபூஜை நிகழ்த்தினார் கமல். 30 நிமிடங்கள் வரை ஓடும் காட்சிகளையும் எடுத்து முடித்து ஒரு பாடலையும் ரிலீஸ் செய்தார். ஆனால் அதன் பின் பொருளாதார காரணங்களால் இந்த படம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தை கமல் மீண்டும் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் நாயகனாக அவர் நடிக்காமல் வேறு கதாநாயகனை வைத்து அவர் இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மருதநாயகம் சம்மந்தமான வேலைகளை மீண்டும் தொடங்க கமல் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள கமலின் நெருங்கிய நண்பரான சந்தானபாரதி, “மருதநாயகம் படத்தை கமல் விக்ரம்மை வைத்து எடுக்க உள்ளதாக வெளிவரும் தகவலை நானும் கேள்விப் பட்டேன். ஆனால் அதுபற்றி கமலிடம் இன்னும் விசாரிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்