துணிவு படத்துல 16 நாள் நடிச்சும் அஜித் கூட சீன இல்லை… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (14:25 IST)
அஜித் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள துணிவு திரைப்படம் இன்னும் இரு நாட்களில் ரிலீஸ் ஆக உள்ளது.

அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியான நிலையில் பாசிட்டிவ்வான கருத்துகளைப் பெற்றது. பழைய படங்களில் அஜித் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரைலர் உறுதி செய்தது.

இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “படத்தில் கமிஷ்னர் வேடத்தில் நான் நடித்துள்ளேன். 16 நாட்கள் நான் ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். ஆனாலும் எனக்கு அஜித்தோடு நேரடியானக் காட்சிகள் இல்லை. தொலைபேசியில் அவரோடு உரையாடுவது போன்ற காட்சிகள்தான் இருந்தன” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்