சமந்தாவின் படுதோல்வி அடைந்த ‘சாகுந்தலம்’: இன்று முதல் அமேசான் ஓடிடியில்..!

Webdunia
வியாழன், 11 மே 2023 (08:13 IST)
சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவான சாகுந்தலம் என்ற திரைப்படம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் படுதோல்வி அடைந்தது. 
 
ரூபாய் 65 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெறும் 20 கோடி மட்டுமே உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் படுதோல்வி அடைந்த சாகுந்தலம் திரைப்படம் இன்று முதல் அமேசான் ஓடிடியில் வெளியாகி உள்ளது. 
 
தமிழ் தெலுங்கு ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் சாகுந்தலம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெற்றி பெறாத இந்த படம் ஓடிடியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்