தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை சகுந்தலம் எனும் பெயரில் உருவாக்கினார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் தேவ் மோகன் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். படம் நீண்ட தாமதத்துக்குப் பிறகு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு தியேட்டர்களில் ஈயாடுகிறது. இதனால் படத்துக்கு பெரும் நஷ்டம் வரும் என சொல்லப்படுகிறது. முன்பே ஓடிடி உரிமை விற்கப்பட்டு விட்ட நிலையில், இன்னும் சேட்டிலைட் உரிமை விற்கப்படவில்லையாம். திரையரங்க வசூலும் மோசம் என்பதால் 20 கோடி ரூபாய் அளவுக்கு தயாரிப்பு நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு “என்னுடைய 25 வருட சினிமா தயாரிப்பு அனுபவத்தில் சகுந்தலம் திரைப்படம் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் முதல் நாளே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அப்போதே நான் இதற்கு தயாராகிவிட்டேன். ஒரு படம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தால், அவர்கள் அதைக் கொண்டாடுவார்கள். பிடிக்கவில்லை என்றால் இப்படிதான் ஆகும்” எனக் கூறியுள்ளார்.