சின்னத்திரையில் தொகுப்பாளினியாக களமிறங்கிய சமந்தா – சம்பளம் இவ்வளவா?

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (17:59 IST)
நடிகை சமந்தா ஓடிடி சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்ற ஒரு எபிசோட்டுக்கு 1.5 லட்ச ரூபாய் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா கால லாக்டவுனால் வாய்ப்புகள் குறைந்துள்ளதால் அவர் இப்போது ஓடிடியிலும் கால்பதித்துள்ளார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை சில எபிசோட்கள் தொகுத்து வழங்கிய அவர் இப்போது ஒரு ஓடிடி தளத்தில் தொகுப்பாளினியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதன் முதல் எபிசோட்டில் தெலுங்கு சினிமாவின் வளரும் நடிகரான விஜய் தேவாரகொண்டாவை நேர்காணல் செய்துள்ளார். அதற்காக ஒரு எபிசோட்டுக்கு அவருக்கு 1. 5 லட்சம் சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மிகப்பெரிய தொகைக்காகதான் அவர் அதற்கு ஒத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்