“கன்னத்தில் கொடுத்ததை லிப் கிஸ்ஸாக மாற்றிவிட்டனர்” – சமந்தா

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (12:10 IST)
‘கன்னத்தில் கொடுத்த கிஸ்ஸை லிப் கிஸ்ஸாக மாற்றிவிட்டனர்’ எனத் தெரிவித்துள்ளார் சமந்தா.
 
ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘ரங்கஸ்தலம்’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம், சமீபத்தில் ரிலீஸானது. இந்தப் படத்தில் ராம் சரணும், சமந்தாவும் லிப் டூ லிப் கிஸ் கொடுத்துக் கொள்ளும் காட்சி இருக்கிறது.
 
‘திருமணமான பிறகு லிப் கிஸ் காட்சியில் நடிக்கலாமா?’ என்று சமந்தாவிடம் கேட்டபோது, “திருமணமான நடிகர்கள் முத்தக்காட்சியில் நடிக்கும்போது மட்டும் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால், நடிகைகள் என்றால் மட்டும் ஏதேதோ கேட்கிறீர்கள்?” என்று பொங்கி எழுந்துவிட்டார்.
 
பின்னர் சமாதானமானவர், “நான் ராம் சரண் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். அதை கேமரா ட்ரிக்ஸில் லிப் கிஸ்ஸாக மாற்றிவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார் சமந்தா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்