‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்தபோது நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இந்தக் காதல், கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இருவருமே நடிகர்கள் என்பதால், ஒருவர் படங்களைப் பற்றி மற்றொருவரிடம் விவாதிப்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து சமந்தாவிடம் கேட்டபோது, “என்னுடைய படங்கள் பற்றி கணவரிடம் விவாதிக்கவே மாட்டேன். அவ்வளவு ஏன்… நான் கேட்ட கதைகளைக்கூட அவரிடம் கூறி, ‘இதில் நடிக்கலாமா? வேண்டாமா?’ என ஒப்பீனியன் கூட கேட்க மாட்டேன். ஒரு நடிகையாக எந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன். அவரும் அப்படித்தான்” எனப் பதில் அளித்துள்ளார்.