தீபாவளி ரிலீஸீல் இருந்து பின்வாங்கிய சல்மான் கான் படம்!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (11:03 IST)
சல்மான் கான் நடித்துள்ள ஆந்திம் தி பைனல் ட்ரூத் திரைப்பட வெளியீடு தீபாவளியில் இருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு இந்தியில் அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள சூர்யவன்ஷி திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் அக்‌ஷய்குமார், ரண்வீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்துள்ளனர். அதனால் பொருட்செலவு அதிகமாகி பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தோடு சல்மான் கான் நடித்துள்ள ஆந்திம் தி பைனல் ட்ரூத் என்ற படமும் வெளியாகும் என சொல்லப்பட்டது.

ஆனால் சூர்யவன்ஷி படத்தின் இயகுனர் ரோஹித் ஷெட்டி சல்மான் கானை சந்தித்து தங்கள் படத்துக்காக ரிலீஸை தள்ளிவைக்குமாறு கேட்டதாகவும் அதற்கு ஒப்புக்கொண்டு சல்மான் கான் தனது பட ரிலீஸை தள்ளிவைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்