திருமணம் ஆகி 17 வயதில் மகள் இருக்கிறாரா? சல்மான் கான் பதில்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (17:26 IST)
நடிகர் சல்மான் கானுக்கு திருமணம் ஆகி 17 வயதில் ஒரு மகள் இருப்பதாக வெளியான வதந்திக்கு அவர் பதிலளித்துள்ளார்.

நடிகர் சல்மான் கான் இந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். 55 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் பேட்சிலராக உள்ளார். இந்நிலையில் அவரைப் பற்றியும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும் பல்வேறு விதமான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தனது சகோதரர் அர்பாஸ் கான் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் ‘உங்களுக்கு திருமணம் ஆகி 17 வயதில் துபாயில் இருப்பதாக ஒருவர் கூறியுள்ளார். அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?’ எனக் கேட்ட போது சல்மான் கான் ‘இதெல்லாம் அபத்தம். இவருக்கு பதில் சொல்லி என் கண்ணியத்தைக் காட்டவேண்டும் என நினைக்கிறாரா?. எனக்கு மனைவி கிடையாது. நான் இந்தியாவில் வாழ்கிறேன். 9 வயதிலிருந்து கேலக்ஸி அபார்ட்மென்ட்ஸில் தான் வசிக்கிறேன்.  ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அது தெரியும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்