2 ஆண்டுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி… சாய்பல்லவி நெகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (13:45 IST)
தெலுங்கின் பிரபல நடிகரான நாக சைதன்யா கடந்த சில ஆண்டுகளாக வரிசையாக தோல்வி படங்களாக தந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தேங்க்யூ மற்றும் கஸ்டடி ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன.

இதையடுத்து அவர் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அந்த வகையில் இப்போது அவர் கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த படத்தை கார்த்திகேயா 2 என்ற ஹிட் படத்தை இயக்கிய சந்து மொண்டேட்டி இயக்குகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று சமீபத்தில் ரிலீஸ் ஆகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய சாய்பல்லவி “2 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. மிகவும் பாசிட்டிவாக உணர்கிறேன். ” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்