மறைந்த நடிகர் பெயரில் சாலை...ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (22:14 IST)
கடந்தாண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவை உலுக்கியது. இந்நிலையில் சுஷாந்த் சிங் பெயர் டெல்லியில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் 14 ஆம் தேதி இந்திப்பட நடிகர் சுஷாந்த் சிங் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 34 ஆகும்.

தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்துப் புகழ் பெற்ற அவர் பாலிவுட்டில் ஏற்பட்ட நொபோஷம் காரணமாக மும்பை பாந்ராவிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்நிலையில், டெல்லியிலுள்ள தெற்கு ஆண்ட்ரூஸ் கஞ்ச் என்ற பகுதிக்கு சுஷாந்த் சிங்புத் என்று பெயர் சூட்டப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தெற்கு டெல்லி மாநகராட்சியின் கவுன்சிலர் அபிஷேக் தத் இதை மொழிந்துள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி இந்த சாலைக்கு சுஷாந்த் பெயர் சூட்டப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்