அதாவது, உங்களுக்கு தெரியாமலே ஜிப் கழண்டுடுச்சு அப்படித்தானே ? ரசிகர்களை திணற வைத்த ரித்திகா சிங்!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (07:42 IST)
இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்த ரித்திகா சிங் அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்த அவர் தமிழ், தெலுங்கி , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் அரவிந்த் சாமியின் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. நிஜ குத்து சண்டை வீராங்கனையான இவர் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மெருக்கேற்றி வருகிறார். girl next door போல் curly hair வைத்துக்கொண்டு பெரும்பாலும் ஜீன்ஸ் பேண்ட் டீ ஷர்ட் மட்டும் அணிந்துகொண்டு சிம்பிளாக வந்து ரசிகர்களை வசீகரிப்பார்.

இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுனில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரோபேக் புகைப்படங்களை பதிவிட்டு டைம் பாஸ் செய்து வரும் ரித்திகா தற்போது கருப்பு கலரில் லெதர் ஜெர்கின் அணிந்துகொண்டு அதன் ஜிப்பை பாதியளவு கழட்டிவிட்டு படு கிளாமர் போஸ் கொடுத்து இணையத்தை வசீகரித்து வருகிறார். இதில் கலர்ஃபுல் புகைப்படம் , black and white போட்டோ என இரண்டையும் வெளியிட்டு இதில் எது உங்களுக்கு பிடித்திருக்கு என கேட்டுள்ளார். இதில் ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்திருக்கும் ரித்திகாவிடம் சிலர் நூடுல்ஸ் மண்ட கேட்டு அன்புத்தொல்லை செய்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 or 2?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்