உங்கள பொண்ணு கேட்டு வரட்டுமா...? மாடர்ன் அழகில் ரசிகரை மயக்கிய பிரியா பவானி சங்கர் !

திங்கள், 20 ஜூலை 2020 (11:42 IST)
செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது.

அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இதையடுத்து துல்கர் சல்மான் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். சிங்கிள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்துவரும் பிரியா பவானி கொஞ்சம் கேப் கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகிவிடுவார்.

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் செம ஸ்டைலான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு காந்த கண் பார்வையால் ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் " அழகி எனும் அரக்கியை நான் வேணா உங்கள பொண்ணு பார்க்க வரட்டுமா? என கேட்டு பிரியாவையே வெட்கப்பட வைத்துவிட்டார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Styled by @ashwin.thiyagarajan ❤️ HMU @suresh.menon

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்