ஜோதிகாவின் அடுத்த படத்தில் ரேவதி!

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (09:26 IST)
கடந்த 2015ஆம் ஆண்டு '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வந்த நடிகை ஜோதிகா தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக வெற்றிப்படங்களை அளித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி', 'செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்றது
 
இந்த நிலையில் ஜோதிகாவின் புதிய படம் ஒன்றின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த பூஜையில் நடிகர் சூர்யாவுடன் ஜோதிகா கலந்து கொண்டார்.
 
இந்த படத்தில் ஜோதிகாவுடன் முக்கிய வேடத்தில் நடிகை ரேவதி இணைந்துள்ளார். எஸ்.கல்யாண் இயக்கும் இந்த படத்தில் யோகிபாபு, ஆனந்த்பாபு, மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கின்றார். 
 
இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் இந்த படம் வரும் ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்