"மீ டூ' ஃபேஷன்" பிரபல நடிகையிடம் வாங்கிக்கட்டிய மோகன்லால்!

வெள்ளி, 23 நவம்பர் 2018 (13:00 IST)
மீ டூ இயக்கம் என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. அது சீக்கிரம் காணாமல் போய்விடும் என்று கூறிய நடிகர் மோகன்லாலை கடுமையாக விளாசியுள்ளார் நடிகை ரேவதி. 
 
இந்நிலையில் தற்போது மீ டூ பற்றி மோகன்லால் கூறியதை அவரின் பெயரை குறிப்பிடாமல் ட்விட்டரில் விளாசியுள்ளார் நடிகை ரேவதி. மோகன்லாலின் பேச்சை கேட்டு மலையாள நடிகைகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ள நிலையில் நடிகை ரேவதி ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
ரேவதி கூறியிருப்பதாவது, மீ டூ இயக்கம் நீண்ட காலம் இருக்காது என்று பிரபல நடிகர் தெரிவித்துள்ளார். இது போன்றவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?. அஞ்சலி மேனன் கூறியது போன்று செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு தொல்லைக்கு உள்ளாவது, அதை வெளியே தெரிவிப்பது, அதன் மூலம் எப்படி மாற்றம் வரும் என்பது தெரியாது என்று தெரிவித்துள்ளார். 
 
மோகன்லாலின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் ரேவதி அவரை தான் விளாசியுள்ளார் என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது. இந்த ட்வீட்டை பார்த்த பலர் ரேவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 
மலையாள நடிகர் சங்க தலைவராக இருந்து கொண்டு மோகன்லால் இப்படி பொறுப்பில்லாமல் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகையை கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக வைத்த நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தபோதே மோகன்லால் மீது பல நடிகைகள் கோபம் இருந்தனர். 
 
மோகன்லாலின் இந்த  முடிவை கண்டித்து பல நடிகைகள் அம்மாவில் இருந்து விலகி தனி அமைப்பு துவங்கினர். அதில் ரேவதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்