போதைக்கு அடிமையானவரா ரெஜினா??

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (21:27 IST)
நடிகை ரெஜினா கெசண்ட்ரா தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையானது மூலம் தற்போது தமிழில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு மூன்று தமிழ் படங்களில் நடித்தார்.
 
இவரது நடிப்பில் தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மிஸ்டர் சந்திரமௌலி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு படத்தில் போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்துள்ளார். பிரசாந்த் வர்மா இயக்கத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா நடித்துள்ள படம், அவே. 
 
மூன்று இளம் பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளை பற்றி பேசும் இந்த படம், தனக்கு மிகப் பெரிய டர்னிங் பாயின்ட்டாக இருக்கும் என்கிறார் ரெஜினா. மேலும், இது பற்றி ரெஜினா கூறியதாவது, இதில் நான் மது போதைக்கு அடிமையான பெண்ணாக மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறேன். உண்மையிலேயே இது மிகப் பெரிய சவாலான கேரக்டர். ஹோம் ஒர்க் செய்துதான் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தேன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்