சம்பளத்தை குறைத்து பலே திட்டமிடும் பிரபல நடிகை

ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (16:00 IST)
ரெஜினா கெசண்ட்ரா தமிழில் முன்னணி நடிகையாக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடித்து வருகிறாராம்.

 
நடிகை ரெஜினா கெசண்ட்ரா தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையானது மூலம் தற்போது தமிழில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு மூன்று தமிழ் படங்களில் நடித்தார்.
 
செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியாகமல் சிக்கலில் உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லாமல் உள்ளார். இவர் நடித்த தமிழ் படங்களில் தெலுங்கில் நடிப்பதை விட குறைவான சம்பளத்தையே பெற்றுள்ளார்.
 
இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வந்தால் போதும் என்ற எண்ணத்தில் கிடைக்கும் வாய்ப்பை மட்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்