கேஜிஎப் டப்பிங்கை முடித்த ரவீனா டாண்டன்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (15:49 IST)
கேஜிஎப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் ரவினா டாண்டன் தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரவீணா டண்டன் இப்போது கே ஜி எஃப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஆளவந்தான் மற்றும் சாது ஆகிய படங்களில் நடித்த இவரை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

படத்தில் ராமிகா சென் என்ற பெண் பிரதமராக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் படத்தில் தனது காட்சிகளுககான டப்பிங்கை பேசி முடித்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படத்தை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்