தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பிச்சைக்காரன் 2. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, இயக்குனர் சி. எஸ் அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் கண்ணன் நாராயணன் இசையமைப்பில், டிகே சுரேஷ் எடிட்டராக பணியாற்றியுள்ள படம் ரத்தம்.
இந்த படம் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
சமீபத்தில், இந்த படத்தின் டிரைலரை இயக்குனர்கள் பா. ரஞ்சித் மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் வெளியிட்டனர்.
இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று இப்பட செய்தியாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி தன் 2 வது மகளுடன் கலந்து கொண்டார்.