வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு அதிக காட்சிகள் இல்லாத நிலையில் தான் நடித்தது குறித்து அவரே விளக்கமளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருந்தார். முதன்முறையாக விஜய் – ராஷ்மிகா இணைந்து நடிப்பதால் இருவருக்கு இடையேயான காதல் காட்சிகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் ராஷ்மிகாவுக்கு படத்தில் அதிகமான காட்சிகளே இல்லை என படம் வெளியானதும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முழுதாக ஒரு 4 நிமிடம் அவர் தோன்றுவதே இரண்டு பாடல்களில் மட்டும்தான் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா “வாரிசு படத்தில் எனக்கு பெரிய கதாப்பாத்திரம் எதுவும் இல்லை. இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளது. ஆனாலும் எனக்கு விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதனால் வாரிசு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என கூறியுள்ளார்.