தினமும் என் வீட்டு வேலைக்காரரின் காலில் விழுவேன் - ராஷ்மிகா பேட்டி!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (21:04 IST)
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது. 
 
அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் க்ரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் கீதா கோவிந்தம் ஹிட் அடித்ததால் அவரை கழட்டிவிட்டு விஜயதேவரகொண்டா மீது காதலில் விழுந்தார். 
 
தொடர்ந்து தற்போது நடித்து வரும் ராஷ்மிகா தற்போது பேட்டி ஒன்றில், நான் என்னுடைய வீட்டிற்கு வரும் பெரியவர்களின் பாதங்களை தொட்டு வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளேன். அதுமட்டுமல்லாமல் என் வீட்டில் பணிபுரியும் உதவியாளர்களின் கால்களைத் தொட்டு வணங்குகிறேன். எனக்கு எல்லாருமே சமம். நான் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை" என கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்