என்ன இப்படி கொஞ்சுறானுங்க...? லைக்ஸ் அள்ளும் ரம்யா பாண்டியன் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (13:14 IST)
ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். அதில் ரசிகர்கள் கிறங்கி போக பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.

இதையடுத்து அவர் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டு பெரும் பிரபலமானார். அதையடுத்து புதிய படவாய்ப்புகள் அவரை தேடி வந்தது. இந்நிலையில் அழகான குழந்தையுடன் கியூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் அந்த குழந்தை விட ரம்யா பாண்டியனை தான் அதிகமாக கொஞ்சி ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்