குணமடைந்து வருகிறேன்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:17 IST)
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விரைவாக குணமடைந்து வருவதாகக் கூறியுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாந்த் கோவிந்த் சமீபத்தில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனே  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதன் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இப்போது அவர் விரைவாக குணமடைந்து வருவதாகவும், தனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்